Unna Nechchadhum Song Lyrics

 ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே


பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே


ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே


பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே

பேச பேச தான் இன்னும் பிடிக்குதே

பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே

நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே


ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே

நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே


பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே

தோள் சாயவும் தொலைந்து போகவும்

கடைசியாக ஓரிடம் கிடைத்ததே


ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே


ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா

தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா


பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா

மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா


ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே

இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே


ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே


பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே


இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

Comments

Popular posts from this blog

Kaadhal ennum thervezhuthi